“பிரசவத்துக்கு வந்த பெண்ணை பின் தொடர்ந்து ….”சிசிடிவியில் சிக்கிய காட்சிகள்

 

உத்திர பிரதேச மாநிலம் சூரானா கிராமத்தைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண்ணொருவருக்கு கடந்த வெள்ளி கிழமையன்று பிரசவ வலி எடுத்தது .அதனால் அந்த பெண் தனியாகவே டெலிவரிக்கு வந்தார்.

அவர் முரட்நகரில் உள்ள சமூக சுகாதார மையத்தில் பிரசவத்திற்கு சேர தனியாக ஒரு ஆட்டோவில் வந்தார் .அப்போது அவரை பின் தொடர்ந்து ஒரு குழந்தை கடத்தும் கும்பல் வந்தது.

அதன் பிறகு அந்த பெண் பிரசவத்துக்கு அந்த சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அப்போதும் அந்த கும்பல் அந்த ஹாஸ்ப்பிட்டலில் ஒளிந்து இருந்தது. அதன் பிறகு அந்த பெண்ணுக்கு அன்று இரவு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அப்போது அந்த பெண் மயக்க நிலையில் இருந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த கும்பல் அந்த பெண்ணுக்கு புதிதாக பிறந்த ஆண் குழந்தையை தூக்கி கொண்டு ஓடி விட்டது. பின்னர் அந்த பெண் கண் விழித்து பார்த்த போது தனக்கு பிறந்த குழந்தையை காணாததால் திடுக்கிட்டு அழுதார் .அப்போது அந்த ஹாஸ்ப்பிட்டலில் இருந்த டாக்டர்கள் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்து பார்த்தனர்.

அப்போது ஒரு கூட்டம் குழந்தையை கடத்தி செல்வதை கண்டு அதிச்சியடைந்தனர். பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், அவரது கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள் சுகாதார நிலையத்தில் கூடிபோராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக ஹாஸ்ப்பிட்டல் ஊழியர்கள் சிலரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Contact Us