தைவான் ஜலசந்தி வழியே சென்ற அமெரிக்க போர்க்கப்பல்கள்.. கடுமையாக எதிர்க்கும் சீன அரசு..!!

 

சீனா மற்றும் தைவான், நாடுகள் கடந்த 1949-ஆம் வருடத்தில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டு பிரிந்து விட்டது. எனினும் சீன அரசு, தைவான், தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று தான் கூறிக்கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், தேவைப்பட்டால் படைகளை பயன்படுத்தி தைவானை கைப்பற்றவும் தயங்க மாட்டோம் என்றும் மிரட்டல் விடுக்கிறது.

மேலும், தைவான் ஜலசந்தி வழியே சர்வதேச படைகள் இயங்குவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது. எனினும், சீனாவின் இந்த செயல்பாட்டை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா, அடிக்கடி போர்க்கப்பல்களை தைவான் ஜலசந்தி வழியே இயக்குகிறது. இதன் மூலம், சீனாவிற்கும், எச்சரிக்கை விடுக்கிறது.

இந்நிலையில், அமெரிக்க போர்க் கப்பல்கள் 2, கடந்த வெள்ளிக்கிழமை அன்று தைவான் ஜலசந்தி வழியே சென்றிருக்கிறது. சீனா இதனை கடுமையாக எதிர்த்துள்ளது. மேலும், இது தொடர்பில், சீனாவின் ராணுவ அமைச்சகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அதில், தைவான் ஜலசந்தி வழியே அமெரிக்க போர் கப்பல்கள் செல்வதற்கு கடும் எதிர்ப்பு மற்றும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

அமெரிக்க நாட்டின் இந்த செயல் ஆத்திரமூட்டுகிறது. மேலும், ஜலசந்தியின், அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் பயமுறுத்துவதாக உள்ளது. சீன நாட்டின் பிரிக்க முடியாத பகுதி தைவான். அதன் உள்விவகார செயல்பாடுகளில், பிற நாடுகள் ஈடுபடுவதை சீனா பொறுத்துக்கொண்டிருக்காது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Contact Us