ரொரன்றோவில்… குப்பை கொட்ட போன இடத்தில்…. சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம்….

 

ரொரன்றோவில் Stockyards பகுதிக்கு அருகில் குப்பைத் தொட்டி ஒன்று உள்ளது. அந்த குப்பை தொட்டியில் கனேடிய மெக்கானிக் ஒருவர் கடந்த 25 ஆம் தேதி குப்பை கொட்ட சென்றுள்ளார். அப்போது அந்த குப்பை தொட்டிக்கு அருகில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதை மெக்கானிக் பார்த்துள்ளார். பின்னர் அந்த சூட்கேசை மெக்கானிக் எடுத்து வந்து திறந்து பார்த்தபோது அதனுள் உயிரற்ற நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மெக்கானிக் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்பின் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சூட்கேசில் உயிரற்ற நிலையில் இருந்த அந்த பெண் 41 வயதுடைய Varsha Gajula என்பதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இவர் Caledonனை சேர்ந்த இந்தியப் பெண்மணி என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் போலீசார் நடந்தது கொலை என உறுதி செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில் “இந்தப் பெண்ணை யாராவது பார்த்திருந்தாலோ அல்லது கொலை குறித்து தகவல் தெரிந்தாலோ அல்லது கண்காணிப்பு கேமராவில் இந்த சம்பவம் குறித்த காட்சிகள் ஏதும் பதிவாகி இருந்தாலோ தங்களை தொடர்பு கொள்ளுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Contact Us