டாக்சியின் பின் சீட்டில் வந்த பயணிகள்- திடீரென்று செய்த கேவலமான வேலை

 

உத்தரபிரதேசத்தில் மொராதாபாத் அம்ரோஹாவில் சாலையில் ,கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஹரியானாவில் உள்ள சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்த ராதே ஷ்யாம் என்ற ஒரு டாக்சி ஓட்டுநர் தன்னுடைய டாக்சியோடு காத்திருந்தார் .அப்போது நான்கு பேர் அந்த ஷ்யாமிடம் டாக்சியை வாடகைக்கு எடுத்து பின் சீட்டில் அமர்ந்தனர் .பின்னர் ஷியாம் காசியாபாத் அருகே டாக்சியை ஓட்டி சென்ற போது ,அந்த நாலு பேரும் திடீரென்று பின் சீட்டிலிருந்து எழுந்து ,அந்த ஷ்யாமின் பின் கழுத்தில் துப்பாக்கி காமித்து மிரட்டினர் .

பின்னர் அந்த ஷ்யாமை அடித்து உதைத்து ,அவரிடமிருந்த பணம் மற்றும் பொருட்களை பறித்த கொண்டு ,அவரை அந்த சாலையில் தூக்கி வீசி விட்டு டாக்சியை கடத்தி சென்றனர் .அதன் பிறகு அந்த டாக்சி ட்ரைவர் ஷியாம் மெல்ல எழுந்து ,நேராக அங்குள்ள காவல் நிலையம் சென்று அந்த டாக்சியை கடத்திய நபர்கள் மீது புகார் கொடுத்தார் .

போலீசார் அந்த நபர்கள் மீது கடத்தல் வழக்கு பதிந்து அந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்து பார்த்தனர் .அதன் பிறகு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அந்த டாக்சியையும்,.அதை கடத்திய நபர்களையும் மீட்டனர் .பிறகு அவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

Contact Us