பிரபல பாடகர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை.. தலீபான்கள் வெறிச்செயல்.. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு..!!

 

ஆப்கானிஸ்தான் நாட்டில் இசைக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தான் நாட்டுப்புற பாடகரான ஃபவாத் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஃபவாத், நேற்று அவரின் வீட்டில் இருந்த சமயத்தில், திடீரென்று அங்கு சென்ற தலிபான்கள் அவரை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து அவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர்.

ஃபவாத் பாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தலீபான்களின் செய்தி தொடர்பாளரான, ஜபிஹுல்லா முஜாஹித் இது தொடர்பில் கூறுகையில், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும். இந்த கொலை குறித்த வேறு தகவல்கள் தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும், சில தினங்களுக்கு முன்பாக, தலிபான்கள் நாட்டில் இசைக்கு தடை விதித்தார்கள். இதற்கு முன்பு, இது குறித்து வெளியான தகவலில், இஸ்லாம் மதத்தில் இசைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே நாட்டில் இசை தடை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us