லாட்டரியில் அடித்தது பெருந்தொகை…. ஏழைகளுக்கு உதவிய தம்பதியினர்…. குவியும் பாராட்டுகள்….!!

 

இங்கிலாந்தின் Kath Scott நகரத்தில் Ironville என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியில் 72 வயதுடைய பெண்மணி ஒருவர் அவருடைய கணவருடன் வாழ்ந்து வருகின்றார். பின்னர் அவர்கள் இருவரும் கடந்த 53 ஆண்டுகாலமாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். அந்த பெண்ணின் கணவர் பெயர் ஆலன் ஆகும். இதற்கிடையில் அந்த பெண்மணி கொரோனா காலத்தில் NHS சுகாதாரத் துறையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு இலவசமாக மருத்துவ பாதுகாப்பு சீருடையை தயாரித்துக் கொடுத்து வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணிற்கு உதவியாக அவருடைய கணவரும் இருந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவரும் வாழும் வீட்டின் முகவரிக்கு ‘People’s Postcode Lottery’ அடித்துள்ளது. அதில் 140,000 பவுண்டுகள் பெரும்தொகை பரிசாக விழுந்துள்ளது. இதனால் இருவரும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து கிடைத்த பரிசுத்தொகையை ஏழை மக்களுக்கு உதவித்தொகையாக கொடுக்க வேண்டும் என இருவரும் ஆலோசித்து முடிவெடுத்துள்ளனர். அதாவது கிடைத்த தொகையில் ஒரு பங்கை மட்டும் தனது பேரக் குழந்தைகளுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மற்ற தொகையை இதய நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் Defibrillator விலையுயர்ந்த மருத்துவ உபகரணங்கள் வாங்க உதவித்தொகையாக கொடுத்துள்ளனர். மேலும் அந்த பணத்தில் வாங்கிய உபகரணத்தை அவர்கள் வசிக்கும் ஊரில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் மாட்ட திட்டமிட்டுள்ளார்கள். இதனால் அந்த தம்பதியினருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Contact Us