இரட்டை வேடங்களில் மிரட்டும் விஜய் சேதுபதி, டாப்ஸி.. கலக்கும் அனபெல் சேதுபதி ட்ரெய்லர்

 

சினிமாவில் மோஸ்ட் வாண்டட் நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. சமீபகாலமாக தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் இவருடைய ஆதிக்கம் தொடர ஆரம்பித்துள்ளது. குறிப்பாக தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

இதற்கெல்லாம் காரணம் விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதிக்கு அமைந்த பவானி கதாபாத்திரம் தான் என்று சொன்னால் மிகையாகாது. ஒரு மாஸ் வில்லனாக அந்த படத்தில் கலக்கியிருந்தார்.

அதை பார்த்துவிட்டு தான் தற்போது தெலுங்கு நடிகர்கள் பலரும் விஜய் சேதுபதியை வில்லனாக்க துடித்துக் கொண்டிருக்கின்றனர். அதுவும் அவர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருப்பதுதான் ஆச்சரியம்.

விஜய் சேதுபதி ஹீரோவாகவும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அடுத்த வெளியீடாக உருவாகியிருக்கும் திரைப்படம் அனபெல் சேதுபதி. முதலில் இந்த படத்திற்கு அனபெல் சுப்பிரமணியம் என்றுதான் பெயர் வைத்தனர்.

வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி அனபெல் சேதுபதி படம் ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. மேலும் விஜய் சேதுபதி மற்றும் டாப்சி இருவருமே இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர் என்பதும் கூடுதல் தகவல். மேலும் இந்த படத்தை பழம்பெரும் நடிகர் ஆர் சுந்தர்ராஜன் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.

ஹாரர் காமெடி அம்சத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளிவந்த ட்ரெய்லரும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படம் ஹாட்ஸ்டார் தளத்தில் நல்ல பார்வையாளர்களை பெறும் என படக்குழுவினர் பெரிதும் நம்புகிறார்கள்.

Contact Us