இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்ட விசிக பிரமுகர் கைது!

 

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிகோட்டை மறியல் பகுதியை சேர்ந்தவர் அறிவுடைநம்பி(41). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூறி 28 வயதான பெண்ணை நிச்சயம் செய்துள்ளார். இவர்களுக்கு கடந்த மே மாதம் திருமணம் நடக்கவிருந்தது. திருமணத்துக்கு சில நாட்கள் முன்னர், அறிவுடை நம்பிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது அந்த இளம்பெண்ணுக்கு தெரியவந்துள்ளது.

உடனடியாக அவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார். ஆத்திரமடைந்த அறிவுடை நம்பி, அந்த பெண்ணுடன் எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் ஆபாசமாக வெளியிட்டுள்ளார். இது குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 மாதங்களாக வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில், சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து தஞ்சை போலீசார் அறிவுடைநம்பியை கைது செய்துள்ளனர். மேலும், நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Contact Us