“இன்னும் எத்தனை பேருடா வரிசையா வருவீங்க?” ..ஸ்கூல் பையன்களிடம் சிக்கிய டீனேஜ் பெண் அலறல்

 

ஜார்கண்டின் ராஞ்சியில் உள்ள மந்தர் பகுதியில் ஒரு 13 வயதான பெண் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். அவர் அதே பகுதியில் உள்ள 16 வயதான ஸ்கூல் பையனோடு நட்பு கொண்டு பழகி வந்தார். அதனால் அடிக்கடி இருவரும் ஆன்லைன் மூலமாகவும், நேரிலும் சந்தித்து பேசி வந்துள்ளார்கள். இதை அந்த சிறுவனின் ஆறு நண்பர்கள் கவனித்து வந்துள்ளனர். அதனால் அவர்கள் அந்த பெண் மீது ஆசை கொண்டனர். மேலும் அவரை அடைய சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

இந்நிலையில் அந்த பெண் கடந்த வாரம் வியாழக்கிழமை தன்னுடைய ஸ்கூல் நண்பரை பார்க்க சென்றார். அப்போது அந்த இடத்தில் அவரின் மேலும் ஆறு நண்பர்கள் காத்திருந்தனர். அவர்களின் வயது 15முதல் 16வரைதான். அதன் பிறகு அந்த ஸ்கூல் பையன்கள் அந்த 13வயதான பெண்ணை ஒரு இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.

அதன் பிறகு அந்த பெண் அவர்களிடமிருந்து தப்பித்து, தன்னுடைய வீட்டிற்க்கு சென்றார். அங்கிருந்த தன்னுடைய பெற்றோரிடம் தனக்கு ஸ்கூல் பையன்கள் ஏழு பேரால் நடந்த கொடுமையை விவரித்து கூறினார். அதை கேட்ட அவரின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் சென்று அவர்கள் மீது புகார் கூறினார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு நான்கு பேரை கைது செய்தனர். மீதமுள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Contact Us