3 மில்லியனை தாண்டிய சிம்பு.. கோலிவுட்டில் யாரும் செய்யாத சாதனை

குழந்தை நட்சத்திரமாக அவரின் தந்தை இயக்கத்தில் வெளிவந்த உறவை காத்த கிளி என்கிற படத்தில் அறிமுகமானவருக்கு குழந்தை நட்சத்திரமாக நடிக்கவே பல்வேறு படங்களில் வாய்ப்பு கிடைக்க அதனை திறம்பட நடித்தும் கொடுத்தார்.

இப்போதும் எத்தனையோ தொடர் தோல்விகளை தந்த போதும் இவருக்கான ரசிகர் கூட்டம் குறையவே இல்லை உடல் எடையை உயர்த்திக்கொண்டே சென்றவருக்கு ஈஸ்வரன் படத்திற்கு உடல் எடையை குறைத்த தோற்றம ரசிகர்களிடம் வெகுவான பாராட்டுக்களைப் பெற்றது.

தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் எடுக்கப்பட்ட மாநாடு படம் திரைக்கு தயாராகி வருகிறது.கௌதம் மேனனுட்ன் மீண்டும் கூட்டணி வைக்கும் STR வெந்து தணிந்தது காடு என்கிற பெயரில் நடித்து வந்தார்.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மற்றும் STRக்கு இடைப்பட்ட பிரச்சினைக்காக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் STR ன் ஆஃபிசியல் இன்ஸ்டா பக்கத்தில் வெறும் 300 நாட்களில் 3மில்லியன் அதாது 30லட்சம் நபர்களை ஃபாலோவராக பெற்றுள்ளார் STR.

இது இதுவரை சமூக வலைகளில் பக்கம் கொண்ட எந்த தமிழ் நடிகருக்கும் கிடைத்ததில்லை என்று கூறி STR ரசிகர்கள் வெகுவாய் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைகளில் எங்கு பார்த்தாலும் STR 3M+ என்ற டைட்டிலில் சிம்புவின் புகைப்படங்கள் சுற்றி வருகின்றன.

Contact Us