சிக்கன் கடை ஊழியருக்கு ஆசைப்பட்டு அப்பள வியாபாரியை அநியாயமாக கொன்ற இளம்பெண்

 

புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் அரசூர் ராஜாபகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(43). அப்பள வியாபாரியான சந்திரசேகர், தவமணி(35) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளனர்.

சமீப காலமாக கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 28 ஆம் தேதி அன்று நள்ளிரவு இரவு நீண்ட நேரம் குடும்பத்தகராறு நடந்து வந்திருக்கிறது. அதன்பின்னர் காலையில் தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக அக்கம் பக்கத்தினருக்கு சொல்லியிருக்கிறார் தவமணி.

தகவலறிந்த வில்லியனூர் போலீஸார் சந்திரசேகரின் உடலை கைப்பற்றிய போது அவரின் உடலில் நகக் கீறல் காயங்கள் இருந்துள்ளன. இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தபோது, பிரேத பரிசோதனையில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனால் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். சந்திரசேகரும் தவமணியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதால் தவமணி மீது முதலில் போலீசாருக்கு சந்தேகம் இல்லாமல் இருந்தது. ஆனால் மாரடைப்பால் இறந்தார் என்று அவர் சொன்னதையும் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டில் இருப்பதையும் பார்த்து போலீசார் துருவித் துருவி விசாரித்ததில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அரசூரில் கறிக்கோழி கடைக்கு அடிக்கடி செல்லும்போது திண்டுக்கல்லை சேர்ந்த அஜ்மீர்கான்(25) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ள உறவாக மாறியது. எங்கள் வீட்டில் மாடியிலேயே வாடகைக்கு குடியேறினார் அஜ்மீர். எங்கள் இருவருக்கும் இருக்கும் தொடர்பு தெரிந்துவிட்டதால் கணவர் கண்டித்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. கடந்த இருபத்தி எட்டாம் தேதி அப்படித்தான் தகராறு அதிகமானது. இதையடுத்து நானும் அவனும் சேர்ந்து சந்திரசேகரை கழுத்தை நெரித்தும் தலையணையால் அவரது முகத்தை அழுத்தியும் கொலை செய்துவிட்டு மாரடைப்பால் இறந்ததாக எல்லோரிடமும் சொன்னோம் என்று சொன்னதை கேட்டு போலீசார் அதிர்ந்து போயிருக்கின்றன. இதையடுத்து தவமணியையும் அவரது கள்ளக்காதலன் அதிகாரிகளையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Contact Us