அமெரிக்க ஹெலிகாப்டரில் பிணத்தைகட்டி உலா வந்த தாலிபான்கள்! வெளியான பகிர் காணொளி

 

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான்கள் செய்த அட்டூழிய சம்பவத்தின் காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய நிலையில் தாலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றினர். தொடர்ந்து ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதுமாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.

அதன்படி அப்கானிஸ்தானில் இருந்த மொத்த அமெரிக்க படைகளும் திரும்ப பெறப்பட்டதுடன், நேற்று கடைசி பேட்ஜ் அமெரிக்க வீரர்களும் ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது தாலிபான்கள் ஒரு நபரை கொன்று அமெரிக்க ஹெலிகாப்டரில் கட்டி கந்தகார் பக்கமாக உலா வரும் வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Contact Us