வேலைக்கு வந்த பெண் -அந்த இடத்தில் வந்த காயம் -விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

 

ஹரியானா மாநிலம் குருகிராமில் ஒப்பந்ததாரராக இருக்கும் பிரவீன் என்பவர் தன்னுடைய மனைவியோடு வசித்து வந்தார் .இவரின் மனைவிக்கு சமீபத்தில் ஒரு குழந்தை பிறந்தது .அந்த குழந்தையை கவனித்து கொள்வதற்காக அவர் டெல்லியிலிருந்து 13 வயதான பெண்ணை வேலைக்கு வைத்தார் .அப்போது அவரின் பெற்றோர்கள் அந்த வீட்டில் அந்த பெண்ணை கொண்டு வந்து விட்டு விட்டு ஊருக்கு போய் விட்டனர் .

இந்நிலையில் கடந்த வாரம் அந்த பெண்ணை அந்த பிரவீன் பாலியல் பலாத்காரம் செய்து ,கொலை செய்து விட்டார் .

அதன் பிறகு அவரை அந்த பிரவீன் அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் உணவு விஷத்தால் இறந்து விட்டதாக கூறி சேர்த்தார் .அங்கு அவரை பிரேத பரிசோதனை செய்த டாக்ட்டர்கள் அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்தனர் .அதன் பிறகு அந்த பெண்னின் பெற்றோர் அவருக்கு தனிப்பட்ட இடத்தில காயம் இருப்பதை கண்டுபிடித்தனர்

அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த பிரவீன் மீது புகார் கூறினர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த பிரவீனை ஆகஸ்ட் 28 அன்றுபலாத்கார வழக்கில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Contact Us