திக் திக் நிமிடங்கள், 100 கி.மீ. வேகம், சுக்குநூறாகிய ஆடி கார்..! 7 பேர் பலியான ஷாக் வீடியோ..!

பெங்களூருவில் நிகழ்ந்த கார் விபத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் உயிரிழந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு கோரமங்களாவில் செவ்வாய்க்கிழமை (இன்று) அதிகாலை 1.30 மணியளவில் ஆடி கார் ஒன்று நடைபாதை அருகே இருந்த டிவைடரில் மோதி பெரும் விபத்துக்குளானது. சம்பவம் அறிந்து வந்த போலீசார் காரை சோதனை செய்தபோது காரில் பயணித்த 7 பேரில் 6 சம்பவ இடத்திலேயே படுகாயங்களுடன் உயிரிழந்தது தெரிய வந்தது.
உயிருக்கு போராடி கொண்டிருந்த ஒரு வாலிபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காரை ஓட்டிவந்தவர் மைசூர் திமுக எம்எல்ஏ ஒய் பிரகாஷின் மகன் கருணா சாகர் என்பது தெரிய வந்தது. அவருடன் சேர்ந்து அவரது உறவினர் பிந்து, நண்பர்கள் இஷிதா, தனுஷா, அக்ஷய் கோயல், உத்சவ் மற்றும் ரோஹித் ஆகிய 6 பேர் பயணித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை அதிகாரி கூற்றியதாவது, அதிகாலையில் இப்படி ஒரு கோர விபத்து நடந்துள்ளது. கார் அசுர வேகத்தில் வந்து மோதியதால்தான் காரின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்துள்ளது. எங்கள் வியூகப்படி அவர்கள் மணிக்கு 100 கிமீ வேகத்தில் சென்றிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். காரில் யாரும் சீட் பெல்ட் அணியாமல் பயணித்துள்ளனர். போலீசாருக்கு தகவல் கொடுத்த உள்ளூர் மக்கள் அவர்களை தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.

ஆனால், ஆறு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், ஒருவர் வழியில் இறந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது” என இவ்வாறு கூறினார்.

Contact Us