மறைந்த ஸ்ரீதேவியின் 250 கோடி சொத்துக்கு நடக்கும் பனிப்போர்.. மகள்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் போனி கபூர்

967 ஆம் ஆண்டு வெளியான கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி. அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

ஸ்ரீதேவி பாலிவுட் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது அங்கு தயாரிப்பாளராக இருந்த போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி துபாயில் நடந்த உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு சென்ற போது அங்கேயே மாரடைப்பு காரணமாக இறந்தார். ஸ்ரீதேவி எப்போதுமே தன்னுடைய மகள் விஷயத்தில் கொஞ்சம் கண்டிப்புடையவராகவே இருந்துள்ளார்.

பெண் பிள்ளைகளை நடிகர்கள் நடிகைகள் நடத்தும் பார்ட்டிகளுக்கு அனுப்ப மாட்டாராம். அதேபோல் மகள்கள் சினிமாவில் நடிப்பதில் ஸ்ரீதேவிக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாம். இது சம்பந்தமாக அவ்வப்போது மகள்களுக்கும் தாயாருக்கும் இடையில் சண்டை வந்துள்ளது.

அம்மாவின் பேச்சிற்கு அமைதியாக இருப்பது போல் இருந்த ஜான்வி மற்றும் குஷி கபூர் இருவரும் ஸ்ரீதேவி இறந்த பிறகு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அதில் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.

ஸ்ரீதேவி சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது சுமார் 250 கோடி மதிப்பிலான சொத்துகளை சேர்த்து வைத்திருந்தாராம். அதில் நிறைய பங்களா வீடுகள், ஷேர் மார்க்கெட் என ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. இதில் யார் யாருக்கு என்னென்ன என்பதில் தற்போது பிரச்சனைகள் எழத் தொடங்கியுள்ளதாம்.

ஜான்வி கபூர் தற்போது சினிமாவில் பிரபல நடிகையாகி விட்டதால் தன்னுடைய சொத்து மதிப்புகளை உயர்த்த அம்மாவின் சொத்தைப் பிரித்துக் கொடுக்க சொல்லி சண்டை போடுவதாக போனி கபூரின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனர். இதனால் போனி கபூர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாக தெரிகிறது. இரண்டு மகள்களும் சொத்துக்காக இப்படி அடித்துக் கொள்வார்கள் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என தன்னுடைய வட்டாரங்களில் சொல்லி புலம்பி வருகிறாராம் போனி.

Contact Us