விஷப்பாம்பை வைத்து விளையாடிய சிறுமிக்கு நேர்ந்த கதி

 

ரஷ்யாவில் குழந்தைகளை விலங்குகளுடன் விளையாட அனுமதித்த உயிரியல் பூங்காவில் ஒரு குழந்தையை விஷப்பாம்பு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரஷ்யாவின், Sverdlovsk Oblast என்ற பகுதியில் இருக்கும் ஒரு உயிரியல் பூங்காவில் மனிதர்கள், அங்குள்ள விலங்குகளுடன் விளையாடலாம். எனவே விக்டோரியா என்ற ஐந்து வயதுடைய சிறுமி ஒரு விஷப்பாம்பை தன் கழுத்தில் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது, திடீரென்று சிறுமியின் கன்னத்தை அந்த விஷப்பாம்பு கடித்திருக்கிறது. இதனால், பதற்றமடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், சிறுமியின் கன்னத்தை பாம்பு கடித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த உயிரியல் பூங்காவின் ஊழியர்கள், இது போன்ற சம்பவம் இதற்கு முன்பு நடந்ததில்லை என்கிறார்கள். சிறுமியை கடித்த அந்த விஷப்பாம்பு, hook-snouted rufous beaked snake என்ற வகையைச் சேர்ந்தது என்றும், அது குறைவான விஷத்தன்மை கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us