ஆரம்பிக்கலாமா? ‘பிக்பாஸ் சீசன்-5’ அதிரடியாக வெளியான முதல் புரோமோ…!!!

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. வழக்கமாக இந்த நிகழ்ச்சி ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடத்தப்படும். ஆனால் கடந்த ஆண்டு மட்டும் கொரோனா ஊரடங்கு காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் நிறைவடைந்தது. அதேபோல் 5-வது சீசனும் வருகிற அக்டோபர் மாதம் தொடங்கப்படவுள்ளது.

மேலும் கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் நடிகர் கமல்ஹாசன் சிரித்துக்கொண்டே ‘ஆரம்பிக்கலாமா?’ என கூறுகிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Contact Us