நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட சன்னி லியோன்..

 

சன்னி லியோன் பற்றிய அறிமுகம் நாம் கொடுக்க தேவையில்லை உங்களுக்கு. அந்த படங்களில் ஆரம்பித்த இவர் முதன் முதலில் இந்தியாவில் நுழைந்தது 2011ல் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகத்தான். பின்னர் மனுஷி பாலிவுட்டில் அப்படியே செட்டில் ஆகிவிட்டார்.

தனது கணவர் டேனியல் வெப்பார் உடன் மும்பையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி ஐந்து வருடம் ஆகிறது. கடந்த 2017 இல் இவர் மும்பையில் 21 மாத பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். அவளின் பெயர் நிஷா.

மேலும் மார்ச் 2018 இல் இவர்களுக்கு வாடகைத்தாய் வாயிலாக இரட்டை ஆண் குழந்தை பிறந்தனர். ஆசேர் மற்றும் நோவா சிங் அவர்களின் பெயர்கள்.

பாலிவுட்டில் தொடர்ந்து படங்களில் நடித்து பெயர்பெற்ற சன்னிலியோன் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பெரிய உதவிகளை செய்து வருகிறார். இதனால் உலகமெங்கும் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய கவனத்தை செலுத்த ஆரம்பித்துள்ள சன்னிலியோன் தென்னிந்திய ரசிகர்களை கவர்வதற்காக நீச்சல் உடையில் புகைப்படம் எடுத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். நீண்ட நாட்கள் கழித்து இப்படி ஒரு உடையில் சன்னி லியோனை பார்த்த ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

 

Contact Us