கவினை காதலித்ததுதான் நான் செய்த முதல் தவறு.. உண்மையை உடைக்கும் லாஸ்லியா

 

இதுவரை விஜய் டிவியில் 4 பிக்பாஸ் சீசன்கள் நடத்தப்பட்டாலும் மூன்றாவது சீசன் மட்டும் எப்போதும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. அந்த நிகழ்ச்சியும் சரி, அதில் கலந்துகொண்ட போட்டியாளர்களும் சரி, ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளனர்.

கவின், லாஸ்லியா, பிக்பாஸ் தர்ஷன், பிக்பாஸ் முகேன், சாண்டி மாஸ்டர், ஷெரின், சேரன், சித்தப்பா சரவணன் என அந்த சீசன் களை கட்டியது. மேலும் இவர்களில் பலருக்கும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா தமிழ் சினிமா ரசிகர்களின் பேராதரவை பெற்று கடைசிவரை போராடி வெற்றிக்காக போராடினார். மேலும் சக போட்டியாளரான கவின் என்பவரை காதலித்தார். பிறகு அந்த காதல் கைகூடாமல் போய்விட்டது.

கவின் காதல் பற்றி சமீபத்தில் லாஸ்லியா ஒரு பேட்டியில் கூறியுள்ளது கவிலியா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஏகப்பட்ட சுவாரசியமான விஷயங்கள் இருந்தாலும் கவின் லாஸ்லியா காதல் பிரதானமாக பார்க்கப்பட்டது.

இடையில் லாஸ்லியாவின் தந்தை உள்ளே புகுந்து காதலைப் பிரித்தது எல்லாம் வேற லெவல். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பின்னர் இருவரும் தற்போது வரை சந்தித்துக் கொள்ளாமல் இருக்கின்றனர். இந்நிலையில் லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் காதல் செய்த தவறு செய்து விட்டேன் எனக்கூறி வருத்தப்பட்டுள்ளார்.

என்னுடைய தங்கைகளுக்காக, என்னுடைய குடும்பத்திற்காக விளையாட வந்த எனக்கு காதல் வந்தது தவறு எனவும், அதை உணர்ந்த பிறகுதான் அந்த உறவில் இருந்து பிரிந்து வந்துவிட்டேன் எனவும் கவின் உடனான காதல் முடிவு பெற்றது என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

 

Contact Us