கட்டுக்கட்டாக சிகரெட் பாக்கெட்கள்…. விமான நிலையத்தில் சிக்கிய முதியவர்…. நீதிமன்றத்தில் ஆஜர்….!!

 

பிரித்தானியாவில் உள்ள Rugby நகரை சேர்ந்தவர் 56 வயதான Bojkin. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு Slovakiaவில் இருந்து பிரித்தானியா வந்துள்ளார். அப்போது luton விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் Bojkinனை தடுத்து நிறுத்தினர். ஏனெனில் அவரது சூட்கேசில் சிறிய ரக சிகரெட் பாக்கெட்கள் அதிகமாக இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். எனவே அதனை சோதனை செய்து பார்த்த பொழுது மொத்தம் 19, 840 சிகரெட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் Bojkinனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் கூறியதாவது “இந்த சிகரெட் பாக்கெட்களை எனக்கும் எனது குடும்பத்தின் பயன்பாட்டிற்காகவும் வாங்கியுள்ளேன். நான் சிகரெட்களை விற்பனை செய்யும் நோக்கத்திற்காக வாங்கவில்லை” என்று கூறியுள்ளார்.

குறிப்பாக இந்த சிகரெட்களை சட்ட முறைப்படி நாட்டிற்குள் வணிக பயன்பாட்டிற்காக கொண்டு வரும் பொழுது 5,817.78 பவுண்ட் வரியாக செலுத்த வேண்டும். இதற்கிடையில் மேலும் இது குறித்து Bojkin கூறியதில் ” நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, மருத்துவ சிகிச்சைக்காக பிரித்தானியா திரும்பியுள்ளேன். குளிர்காலத்தை பிரித்தானியாவிலும் , கோடைகாலத்தை Slovakiaவிலும் செலவிடுவேன். அதிலும் 2008 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் வசித்து வருகிறேன். ஆனால் Slovakiaவிற்கு சென்று வருவது எனது வழக்கமான ஓன்று” என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் இந்த வாரம் அதிகாரிகள் ஆஜர்படுத்தப்படுத்தினர். அவர் நீதிமன்றத்தில் கூறியதில் “நானும் என் மனைவியும் நாளொன்றுக்கு 5 பாக்கெட் சிகரெட்டுகளை புகைப்போம்.

Contact Us