கொள்ளையர்களால் அதிர்ந்த நகரம்; வாகனத்தில் பொதுமக்களை கட்டிகொண்டுசென்ற அவலம்!

 

பிரேசிலில் 3 வங்கிகளை கொள்ளையடித்த கும்பல் தப்பிச்செல்கையில் , தமது வாகனத்தில் பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடித்து கட்டிக் கொண்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள்கிழமை நள்ளிரவு சாவோ பாலோ மாநிலத்தில் உள்ள அரகடுபாவில் பிரம்மாண்டமான தொடர் வங்கிக் கொள்ளைகள் நடந்தன. எனினும் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் விபரத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை.

கொள்ளையர்கள் வங்கிகளில் பணியாற்றுபவர்களின் மூலமே தகவல் பெற்று, கொள்ளையர்கள் களமிங்கியதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர். சுமார் 15-20 கொள்ளையர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கொள்ளையர்களிற்கும் பொலிசாருக்குமிடையில் பெரும் மோதல் இடம்பெற்றது.

அத்துடன் இந்த துப்பாக்கிச்சூட்டினால் அரகதுபா நகரம் அதிர்ந்துள்ளது. நகரம் முழுவதும் 20 இடங்களில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. பொலிசாரையும், பொதுமக்களையும் திசைதிருப்பி காரியத்தை முடிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Contact Us