மீண்டும் காதல் சர்ச்சையில் ராஷ்மிகா மந்தனா

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா, மீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட நடிகையான இவர், 2016-ம் ஆண்டு வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். ராஷ்மிகா, தற்போது இந்தி, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம்தான் ராஷ்மிகா பிரபலமானார். இந்த ஜோடி மீண்டும் ‘டியர் காம்ரேட்’ படத்திலும் ஒன்றாக நடித்தது. இளைஞர்கள் பலரும் கொண்டாடும் நட்சத்திர ஜோடியாக மாறிய இவர்கள், காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியானது.

இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ராஷ்மிகா, தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார். இந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்திலும் ராஷ்மிகா வெளியிட்டுள்ளார். ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள இப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் இருவரும் காதலிப்பதாக மீண்டும் செய்தி பரவுகிறது.

Contact Us