விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ கார் வாங்கிய ஜிபி முத்து.. வைரல் புகைப்படத்தால் அதிர்ந்த கோலிவுட்

தமிழ் சினிமாவில் தற்போது சமூக வலைதளத்தில் பிரபலமாக இருப்பவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகிறது. அப்படி சமூக வலைதளத்தின் மூலம் சினிமாவில் நடிப்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். தற்போது ஜி பி முத்து சமூக வளைதளத்தில் பிரபலமான இதன் மூலம் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

டிக் டாக் மூலம் பிரபலமான ஜி பி முத்து அதன் பிறகு பேப்பரை டின் மூலம் மிகவும் பிரபலமானார். இவரைப் பற்றிய விமர்சனங்களுக்கு வெளிப்படையாக கருத்து தெரிவித்து சமூக வலைதளத்தில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

தற்போது ஜிபோர்டு எனும் பெயரில் சமூக வலைதளத்தில் தனக்கு வரும் பார்சல்களை பிரித்து பார்த்து அதில் என்ன பொருள் என்பதை வெளிப்படையாகக் கூறி ஒரு சில கேலி கிண்டல்கள் மூலம் பிரபலமானார். தற்போது இவருக்கு ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. தற்போது ஒரு சிலர் அழைத்துச் சென்று விடுவது வைத்து சில வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஜி பி முத்து டொயோட்டா கார் வாங்கியிருந்தார் அப்போது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தற்போது ஒரு சில பேட்டிகள் மூலம் வருமானம் வாங்கி வருகிறார். தற்போது பிஎம்டபிள்யூ கார் உடன் ஜி பி முத்து இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது அதனால் ஜி பி முத்து பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளதாக கூறிவருகின்றனர் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Contact Us