பிரியாணி பார்சல் வாங்க வந்த டெலிவரி ஊழியர் -லேட்டாக்கிய ஹோட்டல்காரர் -அடுத்து நடந்த அதிர்ச்சி

 

டெல்லிக்கு அருகில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் ஒரு தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பலர் அங்குள்ள மித்ரா குடியிருப்பில் இருக்கும் ஹோட்டலிலிருந்து உணவை டெலிவரி செய்து வந்தனர். அந்த மித்ரா குடியிருப்பில் சுனில் அகர்வால் என்பவர் ஒரு ஹோட்டலை நடத்திவந்தார். அந்த ஹோட்டலில் கடந்த வாரம் ஒரு உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் கஸ்டமர் கேட்ட பிரியாணி மற்றும் பூரி பார்சலை வாங்கிக்கொண்டு போக வந்தார்.

அப்போது அந்த ஹோட்டலில் கூட்டம் அதிகமிருந்ததால் பல ஊழியர்கள் காத்திருந்தனர். அப்போது அங்கு சாப்பிட வந்த பலரும் காத்திருந்தனர் .இந்நிலையில் அந்த டெலிவரி ஊழியர் சத்தம் போட்டு சீக்கிரம் தனக்கு பிரியாணி பார்சலை கொடுக்குமாறு கேட்டார்.

அதனால் அந்த ஹோட்டலில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது .அப்போது அந்த அகர்வால் அங்கே வந்து அந்த ஊழியரை சமாதானப்படுத்தி வந்தார் .அப்போது அந்த டெலிவரி ஊழியர் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து அந்த அகர்வாலை சுட்டு விட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அந்த அகர்வால் , அங்கிருந்த ஒரு ஹாஸ்ப்பிட்டலுக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார் .பிறகு போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி கேமெராவை ஆராய்ந்து பார்த்து அந்த டெலிவரி ஊழியரை தேடி வருகின்றனர்

Contact Us