“பெண்ணை கட்டிலில் கட்டி வைத்து …”நடுரோட்டில் வாலிபர்கள் செய்த கொடுமை.

 

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சஹரில் ஒரு 37 வயதான பெண்ணொருவர் தன்னுடைய கணவர் மற்றும் ஏழு குழந்தைகளோடு வசித்துவந்தார் .இந்நிலையில் அந்த பெண் திடீரென்று ஆக்ரோஷமாக மாறி அனைவரையும் துன்புறுத்துவார் என்று அவரின் குடும்பத்தார் அவரை வீட்டிலிருந்து ஒதுக்கி வைத்திருந்தனர் .

அதன் பிறகு அந்த பெண்ணுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட தகராறில் அந்த குடும்பத்து ஆண்கள் அந்த பெண்ணை ஒரு கட்டிலில் கட்டி ஒரு வயல் வெளிப்பக்கம் இழுத்து சென்று கொடுமைப்படுத்தனர் .அதை பார்த்த அந்த ஊர் மக்கள் அந்த பெண்ணை அவர்களிடமிருந்து காப்பற்றினார்கள் .அதன் பிறகு அந்த பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் தனியே சென்று தன்னுடைய கணவர் மற்றும் அவரின் உறவினர்கள் மீது புகார் கொடுத்தார் .

ஆனால் போலீசார் அப்போது அந்த பெண்ணின் புகாரை கண்டுகொள்ளவில்லை .அதன் பிறகு அந்த பெண்ணை இழுத்துச்சென்று கொடுமைப்படுத்தும் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது .அதை பார்த்த பலர் அந்த பெண்ணை காப்பாற்ற வேண்டுமென்று புகார் கூறினர் .அதன் பேரில் போலீசார் அந்த பெண்ணின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர் .அப்போது அந்த குடும்பத்தினர் அந்த பெண் மன நலம்

பாதிக்கப்பட்டவர் என்றும் ,அவர் தங்களது வீட்டிலுள்ளோரை கொடுமைப்படுத்தியதால் அவரை எங்காவது கொண்டு போய் விட்டு விட இப்படி செய்ததாகக் கூறினார்கள் ஆனால் போலிஸார் அவர்களின் சமாதானத்தை ஏற்காமல் அவர்களின் மீது நடவடிக்கை எடுத்து இருவரை கைது செய்தனர் .

Contact Us