கணவரை பிரியும் பிரபல நடிகை.. 3 வாரம் கழித்து மீண்டும் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வைரல் புகைப்படம்!

 

பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி தமிழில் தளபதி விஜய்யின் ‘குஷி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார். இந்தப் படத்தில் மேக்கோரீனா என்ற பாடலுக்கு நடனமாடி இன்றுவரை இளைஞர்களின் மனதை கட்டிப் போட்டுள்ளார். மேலும் ஷில்பா ஷெட்டி இந்தியில் டாப் ஹீரோக்களுக்கு ஜோடி சேர்ந்து முன்னணி கதாநாயகியாக தனது நாற்பதாவது வயது வரை ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ஷில்பா ஷெட்டி கடந்த 2019ஆம் ஆண்டு தொழிலதிபரான ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டு, அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் ராஜ் குந்த்ரா தன்னிடம் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு வந்த நடிகர்களை நிர்வாணமாக நடிக்க கூறியதாகவும், அவர்களை வைத்து ஆபாச படமெடுத்த குற்றத்திற்காகவும் கடந்த மாதம் 19ம் தேதி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அதன்பின்பு பெரும் மன உளைச்சலுக்கு ஆளான ஷில்பா ஷெட்டி, ‘ஆபாச படம் எடுத்து சம்பாதிப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது, குடும்ப மானமே போய்விட்டது’ என்று கதறி அழுதுள்ளதாக தகவல் வெளியானது இந்த சம்பவத்திற்கு பின்பு ஷில்பா ஷெட்டி பங்கேற்ற சூப்பர் டான்சர் நிகழ்ச்சியில் கடந்த மூன்று வாரமாக பங்கேற்கவில்லையாம்.

அதன்பின்பு சென்ற வாரம் மீண்டும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட சூட்டிங் ஸ்பாட் போட்டோவையும் தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது ஷில்பா ஷெட்டி ராஜ்குந்த்ராவை விட்டு விலக முடிவெடுத்து விட்டதாகவும்,

 

அத்துடன் ராஜ்குந்த்ராவின் சொத்துக்களில் ஒரு பைசாவை கூட ஷில்பா ஷெட்டி தொட மாட்டார். ஒருசில ரியாலிட்டி ஷோக்களை தொடர்ந்து பாலிவுட்டில் பல பட வாய்ப்புகள் ஷில்பா ஷெட்டி பெற்றிருப்பதால், அவர் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் சொகுசு வாழ்க்கைக்கு எவ்வித பங்கமும் ஏற்படாது என்று,

அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியுள்ளார். ஆகையால் ஷில்பா ஷெட்டி தன்னுடைய கணவரை விட்டு பிரிவதாக வெளியாகியுள்ள இந்த தகவலால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us