ரொறன்ரோவில் உடல் கருகி பலியான நபரின் அடையாளம் தெரிந்தது

 

ரொறன்ரோவின் ஸ்கார்பரோ பகுதியில் மொத்தமாக எரிந்த வாகனத்திற்குள் சடலமாக மீட்கப்பட்ட நபரின் அடையாளம் தெரிந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி குறித்த விவகாரம் தொடர்பில் இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெர்ரிவித்துள்ளது. ரொறன்ரோ பொலிசார் வெளியிட்ட முதற்கட்ட தகவலின் அடிப்படையில், உடல் கருகி பலியான நபர் 40 வயதான ஜோஹன் பெர்சாத் எனவும்,

ஆகஸ்ட் 14 அன்று காலை 6 மணியளவில் ஸ்டீல்ஸ் அவென்யூ ஈஸ்ட் மற்றும் கார்டன் முரிசன் லேன் அருகில் மொத்தமாக எரிந்த வாகபம் ஒன்றில் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ளனர்.

கொழுந்துவிட்டு எரிந்த வாகனத்தில் தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்த பின்னரே, அந்த வாகனத்தில் சடலம் ஒன்று சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து உடற்கூராய்வில், அந்த நபர் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளதும், எரிந்த வாகனத்தில் அவர் சிக்கியதும் கண்டறியப்பட்டது. ஆனால் உண்மையில் அவரது மரணத்திற்கான காரணம் பொலிசார் வெளியிட மறுத்துள்ளனர்.

இந்த நிலையில் 36 வயதான டென்னிஸ் சிங் என்பவர் இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதும் அவர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதும் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் தெரியவரும் பொதுமக்கள் இந்த வழக்கு தொடர்பில் பொலிசாருக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Contact Us