எம்மை கொன்றாலும் பரவாய் இல்லை; வீதிக்கு இறங்கிய ஆப்கான் பெண்கள்

 

ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகளுக்காக ஹெராட் மாகாண ஆளுநர் வளாகத்திற்கு வெளியே பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.

அத்துடன் , வேலை, கல்வி மற்றும் சுதந்திரத்தில் பெண்களுக்கான உரிமையை கோரியும் அவர்கள் கோஷமிட்டனர். இந்நிலையில் வீட்டில் அடங்கி அடிமையாய் வாழ்வதை விட மரணமே மேல் என போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கூறினார்.

அதோடு கடந்த 20 ஆண்டுகளில் பெண்கள் அடைந்த சாதனைகள் மற்றும் உரிமைகளை இழந்துவிடக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் அங்குள்ள வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை குறித்த கவலை எழுந்தது.

எனினும் , நாங்கள் மாறிவிட்டோம், ஷரியா சட்டத்தின் கீழ் நாட்டில் பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்படும், நிலைமை சரியானதும் பெண்கள் பணிக்கு திரும்பலாம் என தலிபான்கள் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Contact Us