பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு…. நிதி திரட்டிய ஜெர்மனி பெண்…. கைது செய்த போலீசார்….!!

 

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் Denise S. என்பவர். இவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்காக பணம் திரட்டியதாகவும், மத்திய கிழக்கு நாடுகளுடன் அவர்களுக்காக பணப்பரிவர்த்தனை செய்து வருவதாகவும் சந்தேகம் எழுப்பியதை அடுத்து Denise S. கடந்த திங்கட்கிழமை அன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் பணம் திரட்டுவது குறித்த தகவல்களை ஐ.எஸ் அமைப்பிலுள்ள பெண் உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் Denise S. மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் பெண் உறுப்பினர் ஒருவர் குர்திஷ் அகதிகள் முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

அவர் மீண்டும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு திரும்புவதால் அவருக்காக Denise S. நிதி திரட்டுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் Denise Munichக்கு அருகிலுள்ள Geretsried என்ற இடத்தில் ஜெர்மன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவு அளித்ததற்காக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதே போன்று ஜெர்மனியில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்காக நிதி திரட்டிய Aymen A.-J. என்ற ஈராக்கியருக்கும் Denise ஆதரவு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us