£87 பவுண்டுக்கு ரூம் போட்ட மட் ஹனக்- கள்ளக் காதலியோடு சுவிஸ் ஹோட்டலில் உல்லாசம் !

பெண்ணால் அழிந்த பல ராச்சியங்கள் உண்டு, அது போல பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் என்று வர்ணிக்கப்பட்டவர் முன் நாள் சுகாதார துறை அமைச்சர் மட் ஹனக். ஆனால் கட்டிய மனைவி வீட்டில் இருக்க, அவரது அலுவலகத்தில், கள்ளக் காதலியான ஜின்னாவோடு ஜசல்சாவில் இருந்தார் மட் ஹனக். தமிழ் நாட்டில் நித்தியானந்தாவுக்கு கமரா வைத்தது போல லண்டனில் அவரது அலுவலகத்திலும் ஒரு கமரா வைக்கப்பட்டு, அவரது லீலைகள் அடங்கிய வீடியொவை வெளியிட்டது சன் பேப்பர். இதனை அடுத்து அவர் பதவி இழக்க, போதாக் குறைக்கு மனைவியும் அவரை துரத்து விட்டார். இன் நிலையில் பெரும் செல்வந்தரான கணவரை ஜின்னா ஏமாற்றியது தெரிய வர, அவரும் ஜின்னாவை கை கழுவி விட்டார். ஆனால் இவர்கள் காதல் மட்டும் நின்றபாடாக இல்லை…. தற்போது இந்த கொரோனா கால கட்டத்தில் கூட… விமானம் ஏறி…

சுவிஸ் பறந்துள்ளது இந்த காதல் ஜோடி. வெறும் 87 பவுண்டுகளுக்கு சுவிஸ் நாட்டில் ஒரு ஹோட்டல் ரூமை போட்டு அங்கே உல்லாசம் அனுபவித்து வருகிறார்கள். காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் இவர்கள் காதலுக்கு எதுவுமே இல்லை என்று தான் கூறவேண்டும். இது காதலா இல்லை காமமா என்று கூட தெரியவில்லை. ஆனால் இவர்கள் இருவரும் நிச்சயம் நன்றாக அனுபவிக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. போதாக் குறைக்கு ஆங்கில மீடியாக்களுக்கு நல்ல தீனியையும் அள்ளிப் போடுகிறார்கள். போங்கள்….

Contact Us