‘நீங்க ஓடியிருங்க அக்கா’…. இறக்கும் தருவாயிலும் தங்கையின் பாசம்…. மனைவியைக் கொன்ற கணவன்….!!

 

கனடாவை சேர்ந்த Charlene மற்றும் Delane இருவரும் நெடுநாள் காதலர்களாக இருந்து பின் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிய நிலையில் இரு குழந்தைகள் உள்ளனர். ஆனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஒரு நாள் Charlene தனது அக்காவான Della Duquetteடிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அதில் “நீங்கள் என்னை தொடர்பு கொண்டு அழைக்கும் பொழுது நான் பதிலளிக்கவில்லை என்றால் உடனே என்னை தேடி வாருங்கள். ஏனெனில் எனக்கு Delane மூலம் பிரச்சனை ஏதாவது ஏற்பட்டிருக்கும்” என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு முன்பாக Charlene Graham அவரது கணவரான Delane வை பிரிந்து வந்துள்ளார்.

மேலும் Charlene வேறு ஒருவரை காதலிக்க தொடங்கியுள்ளார். இதனையடுத்து அவர் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்த வந்துள்ளார். இதன் பிறகு Charlene வை நீண்ட நேரமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்துள்ளனர். ஆனால் அவர் அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை என்றவுடன் பதறிப்போய் Charlene குடும்பம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளது. அதிலும் போலீசார் வரும் வரை காத்திருக்க முடியாமல் Della Duquette தங்கையை காணச் சென்றுள்ளார். அவர் அங்கு சென்ற பொது Delane தனது தங்கையை தாக்குவதை கண்டு Della Duquette கட்டுப்படுத்த முயற்சித்துள்ளார். அதற்கு முன்பாகவே Delane கத்தியால் Charlene வை பலமுறை குத்தியுள்ளார். இதனை தொடர்ந்து Delane கத்தியால் Dellaவின் கையையும் கீறியுள்ளார். இந்த நிலையில் அவரின் கையில் இருந்த கத்தி நழுவி கீழே விழுந்துள்ளது.

உடனே Delane தான் தங்கியிருந்த கேம்பருக்குச் சென்று அங்கிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து வந்து Della Duquette கண்முன்னே அவரது தங்கையை சுட்டுள்ளார். மேலும் தனது அக்காவை சுட முயல்கிறார் என்று தெரிந்தவுடன் Charlene உடனே Dellaவை ஓடிவிடு என்று கூறியுள்ளார். இதற்கிடையில் Delane கேம்பருக்குள் சென்று தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் நடந்த பொழுது Della Duquette குரல் கொடுத்தும் எவரும் உதவிக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். குறிப்பாக இத்தனை ஆண்டுகளாக வாழ்வில் துன்பங்களை அனுபவித்து வந்த Charlene இது குறித்து போலீசாரிடமோ குடும்பத்தாரிடமோ கூறியிருந்தால் காப்பற்றப்பட்டிருப்பார் என்று அவரது இன்னொரு சகோதரியான Roxanne வேதனையுடன் கூறியுள்ளார்.

Contact Us