கர்ப்பிணிக்கு பிறந்த பெண் குழந்தை…. அறிய வகை நோயால் பாதிப்பு…. அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்….!!

 

தென்னாப்பிரிக்காவில் கிழக்கு கேப் மாகாணம் அமைந்துள்ளது. அந்த மாகாணத்தில் வசிக்கும் 20 வயதுடைய கர்ப்பிணி பெண்ணிற்கு கடந்த மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த செய்தியை தொடர்ந்து ஒரு சோக செய்தியும் வெளியாகியுள்ளது. அதாவது அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவத்திற்கான நேரம் நெருங்க அவர்களது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் சற்று தாமதமாக வந்ததன் காரணமாக அந்தப் பெண் வீட்டிலேயே குழந்தை பெற்றுள்ளார். அந்த குழந்தையின் முகத்தை பார்த்ததும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அச்சத்தில் தாயையும் சேயையும் ஆம்புலன்ஸில் விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன்பின் மருத்துவமனையில் மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்துள்ளனர். இதில் அந்த குழந்தை progeria நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதுக்குறித்து மருத்துவர்கள் அந்த தாயாரிடம் கூறியதாவது “progeria என்ற அரியவகை உடலமைப்பால் பாதிக்கப்பட்ட குழந்தையின் உடல் தோற்றத்தில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டேதான் இருக்கும். முதல் இரண்டு ஆண்டுகளில் அந்த மாற்றம் அதிவிரைவாக இருக்கும்” என கூறியுள்ளனர். மேலும் அந்த குழந்தையின் பாட்டி பிள்ளை பிறந்தது அழவில்லை. விலா எலும்பின் வழியாகதான் சுவாசிக்கிறது என்று கூறியுள்ளார். இதனையடுத்து progeria உடலமைப்பு உடைய அந்த குழந்தையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை பார்த்து மக்கள் பலர் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். இதுகுறித்து அந்த குழந்தையின் தாயார் கூறுயதாவது “மக்களின் கேலியும் கிண்டலும் தனக்கு வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது. கேலி செய்யும் மக்கள் தண்டிக்கப்பட வேண்டும்.” என கண்ணி மல்க கூறியுள்ளார். இருப்பினும் progeria என்ற அரியவகை உடல் தோற்றத்துடன் உலகம் முழுவதும் 131 பேர் வாழ்ந்து வருவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

Contact Us