கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த ரசிகர்கள்.. ஏன்டா இப்படி? என கொந்தளித்த சித்தார்த்

கடந்த சில வருடங்களாகவே சித்தார்த் ஏதோ ஒரு வகையில் ரசிகர்களால் கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறார். அதற்கு என்று அவரை இப்படியா செய்வது? என்பது போல ரசிகர்கள் செய்த செயலை பார்த்து சமூக வலைதளமே ஒரு நிமிஷம் ஆடிப்போய் விட்டது.

தமிழ் சினிமாவில் அறிமுகமான சித்தார்த் தற்போது இந்திய சினிமாவே கவனிக்கப்படும் நடிகராக வலம் வருகிறார். முன்னணி நடிகராக இல்லை என்றாலும் அனைத்து மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார்.

இவருடைய சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு இவர் அடிக்கடி சமூகத்திற்கு கருத்து சொல்கிறேன் என ஏதாவது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவார்.

இதனால் அது சம்பந்தப்பட்ட ரசிகர்களிடம் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சண்டை கூட வரும். கடைசியாக கூட மோடி விஷயத்தில் சமூக கருத்துகள் சொல்கிறேன் என பல சிக்கல்களில் மாட்டி சிக்கி தவித்தார். அதன் பிறகு வேறு எந்த ஒரு விஷயத்திற்கும் குரல் கொடுக்காமல் அமைதியாக இருந்து வருகிறார்.

இருந்தாலும் சும்மா இருந்த என்னை சொறிந்து விட்ட கதையாக அவருக்கு திடீரென கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அதற்கு காரணம் கடந்த ஹிந்தி பிக் பாஸ் சீசன்13 கலந்துகொண்டு ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்ற சித்தார்த் சுக்லா என்பவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார்.

அவருடைய பெயரும் சித்தார்த் பேரும் ஒரே மாதிரி இருந்ததால் நம்ம சித்தார்த் தான் இறந்துவிட்டார் என ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து விட்டார்கள். அதை சித்தார்த் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இலக்கு வெறுப்பு மற்றும் தொல்லை. நாம் எதற்கு குறைக்கப்பட்டுள்ளோம்? என கேள்வி கேட்டுள்ளார்.

Contact Us