பிக்பாஸ் ஜோடியில் அனிதா சம்பத் எடுத்த அதிரடி முடிவு.. வியப்பில் ஆழ்ந்த நடுவர்கள்!

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால், அதில் பங்கேற்ற போட்டியாளர்களை வைத்து ‘பிக்பாஸ் ஜோடிகள்’ என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியை கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் ஒளிபரப்பு செய்கின்றனர்.

இதில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் ஆகிய இருவரும் நடுவர்களாக உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கேப்ரில்லா-ஆஜித், ஜித்தன் ரமேஷ்-சம்யுக்தா, பாலாஜி-நிஷா, சோம் சேகர்-ஐஸ்வர்யா, சென்றாயன்-ஜூலி, அனிதா-ஷாரிக் ஆகியோர் ஜோடிகளாக நடனமாடி வருகின்றனர்.

அந்தவகையில் இந்த வாரம் அனிதா-ஷாரிக் இருவரும் தங்கள் கண்களை கட்டிக்கொண்டு நடனமாட உள்ளனர். அதற்கான புரமோ தற்போது விஜய் டிவியில் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனிதா கண்தானம் செய்யவுள்ளதாகவும்,

கண் தானம் செய்வது எவ்வளவு முக்கியமானது என்பதை நடுவர்கள் இடம் பகிர்ந்துள்ளார். அவர்களது நடனத்தையும் அனிதாவின் கண்ணான முடிவிற்கு நடுவர்கள் வியந்து தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

எனவே சோசியல் மீடியாக்களிலும் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் அனிதா, அப்போது தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அத்துடன் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு உடனுக்குடன் பதில் அளிப்பதால் பெரிதும் பிரபலமாகி உள்ளார்.

ஆகையால் அனிதாவின் கண் தானம் செய்யும் முடிவிற்கு அவருடைய ரசிகர்கள் தங்களது பாராட்டுக்களை தங்களது கமண்ட்களின் மூலமாக குவித்து வருகின்றனர்.

Contact Us