ஆறு சூட்கேஸ்களுடன் கனடாவிலிருந்து புறப்படும் மூன்று வெளிநாட்டவர்கள்: பொலிசாரிடம் சிக்க நேருமா என அச்சம்

 

லெபனானிலிருந்து வந்து கனடாவில் வாழும் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகிய மூவர் ஆறு சூட்கேஸ்களூடன் தங்கள் சொந்த நாட்டுக்கு புறப்படுகிறார்கள். வழியில் பொலிசாரிடம் சிக்கிக்கொள்வோமா, அல்லது லெபனான் எல்லை அதிகாரிகளிடம் சிக்கிக்கொள்வோமா என அஞ்சும் அந்த மூவரும் தங்கள் சூட்கேஸ்களில் அப்படி எதைக் கொண்டு செல்கிறார்கள்?

Charbel Elia, Patrick Rmeily மற்றும் Julnar Doueik என்னும் அந்த லெபனான் நாட்டவர்கள் மூவர், லெபனானுக்கு புறப்படுகிறார்கள். அவர்கள் வைத்திருக்கும் அந்த சூட்கேஸ்களில் இருப்பது ஒன்றும் சட்ட விரோத பொருட்கள் அல்ல!

அவை அனைத்தும் மருந்துப் பொருட்கள். போத்தல் போத்தலாக ஆஸ்பிரின், இபுபுரூபன், மாஸ்குகள், பால் பவுடர், டயாப்பர்கள், நாப்கின்கள் மற்றும் அவை குறித்த ஆவணங்கள் என ஒரு கட்டத்தில் தங்கள் அறையையே பார்மஸி மாதிரி ஆக்கி வைத்திருந்திருக்கிறார்கள் அவர்கள்.

விடயம் என்னவென்றால், Eliaவுக்கு லெபனானிலிருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது. இரண்டு குழந்தைகளின் தாயான அவரது தோழி, பிள்ளைகளுக்கு பால் கூட வாங்க வழியில்லை என்று கூறி கண்ணீர் விட்டிருக்கிறார். மாதம் வெறும் 20 டொலர்கள் ஊதியத்தில் காலம் தள்ளும் அந்த பெண்ணின் ஒரு குழந்தைக்கு ஒரு வயது, மற்றொரு குழந்தைக்கு இரண்டு வயது.

அதைக் கேட்டதும், நான் அந்த பெண்ணுக்கு பால் வாங்கிக் கொடுக்கவேண்டும் என்றாரம் Elia.

ஆம், ஓரு ஆண்டுக்கும் மேலாக லெபனான் கடுமையான நிதிப் பிரச்சினையில் உள்ளது. விலைவாசியால் தவிக்கும் அங்குள்ளவர்கள், வெளிநாடுகளில் வாழும் தங்கள் உறவினர்கள், அறிமுகமனவர்களிடம் அடிப்படைப் பொருட்களை கேட்கிறார்களாம்.

அதன்படிதான், வான்கூவரில் வாழும் இந்த மூவரும் இந்த ஆறு சூட்கேஸ்களுடன் லெபனானுக்கு புறப்படுகிறார்கள்.

ஆனால், கனடா விமான நிலையத்தில் அதிகாரிகள் தங்கள் மீது சந்தேகப்படுவார்களோ, லெபனானுக்குச் சென்றால் எல்லை அதிகாரிகள் மருந்துகளை பறிமுதல் செய்வார்களோ என அஞ்சுகிறார்கள் Charbel Elia, Patrick Rmeily மற்றும் Julnar Doueik. ஆனாலும் முயற்சி செய்வோம் என புறப்பட்டுவிட்டார்கள் மூவரும்.

 

Contact Us