காளான் சாப்பிட்ட சிறுவர்கள்…. பரிதாபமாக உயிரிழப்பு…. மறுப்பு தெரிவித்துள்ள ஜாகூப் டட்ஜியாக்….!!

 

ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கு பயந்து கடந்த 23 ஆம் தேதி அன்று காபூலில் இருந்து விமானம் மூலம் இரு சிறுவர்கள் தங்கள் குடும்பத்தோடு போலாந்து வந்தடைந்துள்ளனர். அவர்கள் அங்கு சென்றவுடன் வார்சாவுக்கு (Warsaw) அருகிலுள்ள போட்கோவா லெஸ்னா நகரில் இருக்கும் அகதிகளுக்கான விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து மறுநாள் இருவரும் தங்களது சகோதரியுடன் காளான் சாப்பிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மூவருக்கும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் பிறகு சிறுவர்களின் சகோதரி குணமடைந்து வீடு திரும்பியுள்ளாள். ஆனால் அதில் 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

மேலும் 6 வயது சிறுவன் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறான். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போது அகதிகளின் விடுதியில் உணவு பற்றாக்குறையால் காளான் சாப்பிட்டதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இதனை மறுத்து வெளிநாட்டிற்கான அலுவலக செய்தித் தொடர்பாளர் ஜாகூப் டட்ஜியாக் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அகதிகள் முகாமில் பால், இறைச்சி, காய்கறிகள், பழங்கள், குளிர்பானங்கள் போன்ற அனைத்து உணவு பொருட்களும் ஒரு நாளைக்கு மூன்று வேளை வழங்கப்படுகிறது. மேலும் விடுதியில் பணிபுரியும் ஊழியர்கள் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தெரியாத உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துவார்கள்” என்று கூறியுள்ளார்.

Contact Us