பிணமாக மீட்கப்பட்ட 27 மில்லியன் ஜாக்பாட் வென்ற பெண்

 

எட்டு வருடங்களுக்கு முன்னர் 27 மில்லியன் யூரோ ஜெக்பொட் பரிசு பெற்ற யூரோ மில்லியன் வெற்றியாளர் உயிரிழந்துள்ளார். மார்கரட் லோக்ரேயின் என்ற வெற்றியாளரின் மரணத்தில் சந்தேகமில்லை என்றாலும் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வட அயர்லாந்தின் ஸ்டார்பேன் பகுதியில் உள்ள பெலிகொல்மனில் தனியாக குறித்த பெண் வாழ்ந்து வந்துள்ளார்.இந்த நிலையில் இன்று காலை 10.30 க்கு அவசர சேவை பிரிவுக்கு அழைப்பெடுக்கப்பட்டுள்ளது.

லோக்ரேய் தொழிலின்றி இருந்த போது 2013 ஆம் ஆண்டு ஜெக்பொட் பரிசை பெற்றுள்ளார்.தொழில் வாய்ப்பு உள்ளதாக விளம்பரம் ஒன்று இருந்ததாகவும் அதற்கு விண்ணப்பிக்கும் எண்ணமிருந்ததாகவும் அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

சுப்பர்வலுக்கு செல்வதற்கு முன்னர் தொழில் விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.27 மில்லியன் யூரோக்களை பெற்றுக்கொண்டதால் ஏற்பட்ட வெற்றி அவரது வாழ்க்கையை தோல்வியடையச் செய்துள்ளது.

2019 ஆம் ஆண்டு 5 மில்லியன் யூரோக்களுடன் லோக்ரேய் விடப்பட்டுள்ளார்.பல திருட்டுச் சம்பவங்ளை எதிர்கொண்டுள்ளதாக த ஐரிஷ் செய்தி குறிப்பிட்டுள்ளது.

ஜெக்பொட் பரிசு பெறுவதற்கு முன்னர் தான் மகிழ்ச்சியுடன் இருந்ததாகவும் பரிசு குறித்து கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளதாகவும் குறித்த பெண் ஏற்கனவே விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.

வாரந்தத்திற்கு தேவையான 62 யூரோக்கள் தேவையான பணத்தைக்கொண்டு தான் வாழ்ந்து வந்ததுடன் ஏழைகளுக்கும் உதவி வந்துள்ளார்.

இவ்வாறான நிலையில் பல சட்ட குற்றச்சாட்டுகளுக்கும் ஆளான நிலையில் தனிமையில் உயிரிநழ்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Contact Us