நியூசிலாந்தில் துணிகரம் – கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக் கொலை

ஐஎஸ் இயக்கத்தால் கவரப்பட்ட அந்த நபர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தெரிவித்தார்.

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் நேற்று திடீரென நுழைந்தார். அவர் அங்கிருந்த சிலரை கத்தியால் சரமாரியாக குத்தினார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரை சுட்டு வீழ்த்தினர். விசாரணையில், அவர் காவல் துறையினரின் கண்காணிப்பு வளையத்தில் இருந்துவந்தது தற்போது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கூறுகையில், கடந்த 2011-ம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த அந்த நபர் நியூசிலாந்து வந்தார். பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் அவர் இருந்துள்ளார். ஆக்லாந்து நகர்ப்புற பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலுக்குச் சென்ற அவர் அங்கிருந்து கத்தியை எடுத்து மக்களை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இதில், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளார். அவரை கண்காணித்து வந்த காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். காயம் அடைந்தவர்களில் 3 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஐஎஸ் இயக்கத்தால் கவரப்பட்ட  அந்த நபர் இந்த வன்முறை செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

Contact Us