குழந்தைக்கு நடந்த கொடூரம்…. சித்திரவதை செய்த தாய்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

 

உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு எதிராக பல கொடுமைகள் இன்னமும் நடைபெற்று கொண்டுதான் வருகின்றது. தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர்களே குழந்தைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஈவு இரக்கமின்றி குழந்தைகளை கொடுமை செய்யும் சம்பவம் உலகில் அதிக அளவில் நடைபெறுகின்றது. இந்நிலையில் ரஷ்யாவில் உள்ள ஒரு பெண்மணி அவரது 6 வயது பெண் குழந்தையை கடந்த பல நாட்களாக சித்திரவதை செய்துள்ளார். அது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது ரஷ்யாவில் உள்ள ஒரு பெண்மணி தனது 6 வயது பெண் குழந்தையை ஒரு இருட்டு அறையில் 19 பூனைகளுடன் கட்டி வைத்துள்ளார். பின்னர் கண்மூடித்தனமாக அந்த குழந்தையை அடித்து சித்திரவதை செய்துள்ளார்.

இதனையடுத்து அந்த பெண் குழந்தைக்கு சரியாக உணவு கொடுக்காமல் பூனைக்கு வழங்கும் உணவை கொடுத்து அக்குழந்தையை கொடுமை செய்துள்ளார். இதுக்குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையை மீட்டு கொடுமை செய்த தாயை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த கொடூரத் தாயை சிறையில் வைத்து போலீசார் விசாரித்த போது அவர் கூறியதாவது “மூன்று வயதுக்குப் பின் அந்த குழந்தையின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகத்தான் தான் நான் இப்படி செய்தேன்” என வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவ்வாறு பெற்ற தாயே பிஞ்சு குழந்தையை பல நாட்களாக பட்டினி போட்டு இருட்டு அறையில் பூனைகளுடன் அடைத்து வைத்து சித்திரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us