கனேடிய நகரமொன்றில் அதிகாலையில் சாலையில் இரத்தவெள்ளத்தில் கிடந்த நபர்: பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்

 

நேற்று அதிகாலை 4 மணியளவில் கால்கரி பொலிசாருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், 30 வயது நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட, உடனடியாக சம்பவ இடத்துக்கு பொலிசார் விரைந்துள்ளனர்.

அங்கு, சாலையில் இரத்தவெள்ளத்தில் ஒருவர் கிடப்பதைக் கண்ட பொலிசார், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

படுகாயமடைந்திருந்தாலும் அவரது நிலைமை சீராக இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவரைத் தாக்கியவர் அவருக்கு அறிமுகமானவர் என்றும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையின்போது இவர் கத்தியால் குத்தப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக Mark Jonathan Semak (35) என்ற நபரை தாங்கள் தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர் ஐந்து அடி நான்கு அங்குல உயரமுடையவர் என்றும், கட்டுமஸ்தான உடல்வாகுடையவர் என்றும், பழுப்பு நிற முடியும், நீல நிறக் கண்களும் உடையவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவரைக் குறித்து தகவல் தெரியவந்தால் தங்களை அணுகுமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Contact Us