இது தான் காரணமா..? ஆப்கானிஸ்தானில் இளம் பெண்களுக்கு கட்டாய திருமணம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

 

ஆண் குடும்ப உறுப்பினர்களின் துணை இல்லாத பெண்களை நாட்டை விட்டு வெளியேற தலிபான்கள் தடைவிதித்துள்ளனர். இதன் காரணமாக பெரும்பாலான பெண்கள் விமான நிலையத்திற்கு வெளியே திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது . மேலும் இவ்வாறு கட்டாயத் திருமணம் செய்வதன் மூலம் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் தகுதியினை பெறுகின்றனர். ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் சிலர் அந்நாட்டிலுள்ள ஐக்கிய அரபு அமீரக முகாம் ஒன்றில் தலிபான்களிடமிருந்து தப்பிப்பதற்காக திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாக சிஎன்என் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.

மேலும் தங்கள் பெண்கள் தப்பிப்பதற்காக தங்களை கணவர்களாக காட்டிக் கொள்ளும் ஆண்களுக்கு அந்த பெண்களில் குடும்பத்தார் பணம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அமெரிக்க தூதர்கள் இது போன்ற நிகழ்வுகளை அடையாளம் காண உதவுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு துறையுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த சம்பவம் தொடர்பாக ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Contact Us