பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ள அல்கொய்தா…எங்கு தெரியுமா?

 

அல்கொய்தா தீவிரவாதிகள் இஸ்ரேல் நாட்டில் பயங்கரவாத தாக்குதலை நடத்தவுள்ளதாக அமெரிக்காவின் உளவுப்படை ரகசிய தகவல் அளித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்துவிட முடியாது. உலக வல்லரசு நாடாகக் கருதப்படும் அமெரிக்காவில் அல்கொய்தா பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தினர்.

இதில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். நியூயார்க் நகரின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த இரட்டை கோபுரத்தின் மீது பயங்கரவாதிகள் விமானங்களைக் கொண்டு மோதினர். தாக்குதல் நடைபெற்ற செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்கா வரலாற்றில் என்றும் மறக்க முடியாத கறுப்பு நாளாக மாறிப்போனது.

இந்த தாக்குதல் நடத்திய சில மாதங்களில், இஸ்ரேலிலும் மிகப்பெரிய அளவில் அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் வகுத்தது தெரியவந்துள்ளது. இஸ்ரேலில் உள்ள டைம்ஸ் ஆப் இஸ்ரேல் என்ற ஊடகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இஸ்ரேலில் உள்ள இரவு கேளிக்கை விடுதிகளில் தொடர் தாக்குதல்களை நடத்த அல்கொய்தா திட்டம் வகுத்துள்ளது. அமெரிக்க உளவுப்படை அளித்த தகவலின் படி, அல்கொய்தாவின் திட்டம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us