பிரிட்டன் அதி முக்கிய ராணுவ உளவுப் பிரிவு அதிகாரி வீட்டில் சடலமாக மீட்ப்பு- பெரும் விசாரணை: ரஷ்யா தொடர்பா ?

கப்டன் கிரிஸ் மக்ஹோகன் என்னும் 40 வயது அதிகாரி, பிரித்தானியாவின் சரே பகுதில் உள்ள தனது வீட்டில் சடலமாக காணப்பட்டுள்ளார். இவர் பிரித்தானிய ராணுவப் பிரிவில் அதி முக்கிய உளவுப் பிரிவில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இதனை அடுத்து ராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து பெரும் விசாரணை ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள். இதனூடாக 2 பேரை பொலிசார் தற்போது கைதுசெய்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இந்த இரண்டு நபர்களும் சரேயில் உள்ள குரைடன் பகுதியில் போதைப் பொருட்கள் விற்க்கும் நபர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் பாரதூரமான போதைப் பொருளை அதிகாரிக்கு வழங்கி அவரை கொன்றார்களா என்ற கோணத்தில்..

பொலிசார் விசாரணை நடத்தி வரும் வேளையில். இதன் பின் புலத்தில் சில சக்திகள் இருக்கக் கூடும் என்று பொலிசார் நம்புகிறார்கள். ராணுவத்தில் மிக ஒழுக்கமாக இருந்த கிரிஸ் மக்ஹோகன் எவ்வாறு திடீரென போதைப் பொருளுக்கு அடிமையாகினார் என்பது பெரும் சந்தேகமே. அவரது உடலில் போதைப் பொருள் பாவித்த அடையாளங்கள் இருக்கிறது. ஆனால் அது வேண்டும் என்றே செய்யப்பட்டு இருக்கக் கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Contact Us