பிரித்தானியாவில் நேற்று மட்டும் இத்தனை பேர் பலியா?

 

பிரித்தானியாவில் நேற்று மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றினால், 37ஆயிரத்து 578பேர் பாதிக்கப்பட்டதோடு 120பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 69இலட்சத்து 41ஆயிரத்து 611பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஒரு இலட்சத்து 33ஆயிரத்து 161பேர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 55இலட்சத்து 86 ஆயிரத்து 491பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 12இலட்சத்து 21ஆயிரத்து 959 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 1,038பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Contact Us