முறியடிக்கப்பட்ட தீவிரவாதிகளின் திட்டம்…. அமெரிக்காவின் மோசமான நாள்…. வெளியான முக்கிய தகவல்….!!

 

அல்கொய்தா தீவிரவாத அமைப்பினர்கள் அமெரிக்காவில் நடத்திய அதிபயங்கர தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் நாட்டிலும் தாக்குதல் நடத்துவதற்கு போட்ட திட்டம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக அமெரிக்க உளவுப்படை தகவல் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் அல்கொய்தா அமைப்பினர்கள் கடந்த 2001 ஆம் ஆண்டு இரட்டை கோபுரம் உட்பட 4 பகுதிகளில் பயணிகள் விமானத்தின் மூலம் அதிபயங்கர தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலில் மொத்தமாக சுமார் 3,000 த்துக்கும் மேலான அப்பாவி பொதுமக்கள் அநியாயமாக உயிரிழந்துள்ளார்கள். இந்த தாக்குதல் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மோசமான நாளாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த அமெரிக்க தாக்குதலை தொடர்ந்து அல்கொய்தா அமைப்பினர்கள் இஸ்ரேல் நாட்டிலுள்ள இரவு விடுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கு திட்டம் தீட்டியுள்ளார்கள். ஆனால் அந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நடக்கவிடாமல் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் உளவுத்துறை தகவலின்படி தெரியவந்துள்ளது.

Contact Us