அகதி அந்தஸ்து ரத்து…. கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கையர்…. தகவல் வெளியிட்ட பிரதமர்….!!

 

ஆக்லாந்திலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்த இலங்கை நாட்டை சேர்ந்த அகமது ஆதில் முகமது என்பவர் அங்கிருந்த அப்பாவி பொதுமக்களின் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் 7 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் சூப்பர் மார்க்கெட்டில் கொலைவெறி தாக்குதல் நடத்திய அந்த இளைஞரை துப்பாக்கியினால் சுட்டு கொன்றுள்ளார்கள்.

இந்நிலையில் அவர் எதனால் இந்த கொடூர செயலை செய்தார் என்று நியூசிலாந்தின் பிரதமர் தகவல் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த 2013 ஆம் ஆண்டு அகமது ஆதில் முகமது நியூசிலாந்து நாட்டில் பெற்ற அகதி அந்தஸ்தை பெற்றுள்ளார் ஆனால் அவர் பெற்ற அகதி அந்தஸ்து கடந்த 2016 ல் அகமது வெளியிட்ட சர்ச்சைக்குரிய இணையதள கருத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த கோபத்தாலயே அவர் ஆக்லாந்திலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Contact Us