அடுத்த மாநிலத்திலிருந்து குவிந்த பெண்கள் -45000 வாங்கிய டாக்டர் -எதுக்கு தெரிஞ்சா நொந்து போவிங்க

 

ஹரியானாவில் குருகிராமில் வசிக்கும் சத்யேந்திரா என்பவர் சிலருடன் சேர்ந்து ஒரு ஸ்கேன் சென்டர் நடத்தி வந்தார் .அவர் உத்திரபிரதேசம் மற்றும் டெல்லியிலிருந்து பல கர்ப்பிணி பெண்களை கூட்டி வந்து அவர்களின் வயிற்றில் இருப்பது ஆணா இல்லை பெண்ணா என்று கண்டறிந்து கூறி 35000 முதல் 45000 வரை வசூலிப்பதாக சுகாதார துறைக்கு புகார் வந்தது .இதனால் சுகாதார அதிகாரிகள் ஒரு போலியான கர்ப்பிணி பெண்ணை அவரிடம் அனுப்பி ரகசியமாக கனகணித்தனர் .அப்போது அவர் இப்படி சட்டத்திற்கு புறம்பாக கருவை கண்டுபிடிப்பதை கண்டறிந்தனர் .அதன் பேரில் அவர்கள் அந்த சென்டரில் ரெய்டு நடத்தினர்

அப்போது அந்த கிளினிக்கை -டாக்டர் சஞ்சீவ் குமார் மற்றும் ருச்சி ஆகியோர் நடத்தியதை கண்டுபிடித்தனர் . பின்னர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ருச்சி மற்றும் சஞ்சீவை கைது செய்தனர். பிறகு அங்கிருந்து தப்பிக்கும்போது டாக்டர் சத்யேந்திராவையும் போலீசார் கைது செய்தனர்.
இது பற்றி தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் வீரேந்தர் யாதவ் கூறுகையில் “நாங்கள் சட்டவிரோத அல்ட்ராசவுண்ட் இயந்திரங்களை அந்த இடத்திலிருந்து மீட்டெடுத்துள்ளோம். வியாழக்கிழமை இரவு பிசிபிஎன்டிடி சட்டம் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களில், இதுபோன்ற பல ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன. சட்டவிரோத கருக்கலைப்புகளுக்காக டெல்லி மற்றும் உ.பி.யில் ஒரு நெட்வொர்க் உள்ளது என்பதை இது காட்டுகிறது “என்று கூறினார்.

Contact Us