விபச்சாரியை காதலித்த கணவர் -விவாகரத்து கொடுக்க மறுத்த மனைவி -அடுத்து நடந்த விபரீதம்

 

உத்தரபிரதேசத்தின் அலிகரில் வசிக்கும் 36 வயதான கமல் சேகல் என்பவர் 2006ம் ஆண்டு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார் .அவர் பல பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்து வந்தார் .மேலும் அந்த பெண்களில் ஒருவரை காதலித்து வந்தார் .
இந்த காதல் விவகாரம் அவரின் மனைவிக்கு தெரிய வந்தது .அதனால் அவரின் மனைவி அவருடன் சண்டை போட்டார் .இதனால் அந்த கமல் சேகல் அவரின் மனைவியிடம் விவாகரத்து கேட்டார் .ஆனால் அவரின் மனைவியோ விவாகரத்து கொடுக்க மறுத்து விட்டார் .இதனால் அந்த கமல் சேகல் அந்த பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டார் .

அதன் படி அவர் ஆகஸ்ட் 23ம் தேதி அங்குள்ள ஒரு நபரிடம் 50000 ரூபாய் கொடுத்து துப்பாக்கி வாங்கி வைத்திருந்தார் . .மேலும் அவர் மூலம் சிலருக்கு இந்த விஷயம் தெரிய வர ,அவர்கள் போலீசுக்கு தகவல் கூறினர் .அதன் பேரில் போலீசார் அவரை ரகசியமாக கண்காணித்து வந்தனர் .பிறகு ஆகஸ்ட் 31 அன்று கமல் இரண்டு துப்பாக்கிகளை எடுத்து கொண்டு மனைவியை கொல்ல , விகாஸ்புரிக்கு வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. பிறகு போலீசார் வலை விரித்து அவரை கைது செய்தனர் .அவர் மீது 2015ம் ஆண்டு முதல் பல வழக்குகள் பதிய பட்டு நிலுவையில் உள்ளது .அதனை தொடர்ந்து இந்த புதிய வழக்கும் அவர் மீது பதியப்பட்டு விசாரணை நடைபெறுகிறது .

Contact Us