கனடாவில் 3 வயது சிறுவன் தொடர்பில் தந்தையை கைது செய்த பொலிஸ்

 

சொந்த மகனை கடத்திச் சென்று, பொலிசாரால் அம்பர் எச்சரிக்கை விடுத்து தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட சம்பவத்தில், அந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். கியூபெக் பிராந்தியத்தை சேர்ந்த 36 வயதான அந்த நபரை கைது செய்துள்ளதுடன், கடத்தப்பட்ட 3 வயது சிறுவனை தாயாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சிறுவன் காயமடைந்துள்ளானா அல்லது துன்புறுத்தப்பட்டுள்ளானா என்பது தொடர்பில் தற்போது விசாரிக்கப்படவில்லை எனவும், தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மட்டுமே பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை பகல் குறித்த 36 வயது தந்தையுடன் அதிகாரிகள் தரப்பு தொடர்பு கொண்டதாகவும், பின்னர் ஒரு குடியிருப்பில் மகனுடன் பதுங்கியிருந்தவரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 31ம் திகதி தமது 3 வயது மகனை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், கியூபெக் மற்றும் வடமேற்கு நியூ பிரன்சுவிக் பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பொலிஸ் நடவடிக்கைக்கு இது வழிவகுத்தது.

இந்த நிலையில் 5 நாட்களுக்கு பிறகு பொதுமக்கள் சிலர் அளித்த தகவலின் அடிப்படையில் சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளதுடன், அந்த தந்தையை கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Contact Us