ஜெயிலிலிருந்து வந்த கணவன் -அடுத்தவருடன் வாழ்ந்த மனைவி -அடுத்து காண்டான கணவன் செஞ்ச வேலை

 

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் விலே பார்லேவில் வசிக்கும்42 வயதான இக்பால் அப்பாஸ் ஷேக் என்பவர் 2011 இல் ஷிகாம் என்ற பெண்ணின் மகளை மணந்தார்.இப்போது அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் மீது 28 வழக்குகள் உள்ளது ., மேலும் அவருக்கு எட்டு வழக்குகளில் தண்டனை கிடைத்ததில் அவர் சிறையில் இருந்தார் .

அவர் கடந்த புதன்கிழமை புனே எரவாடா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஜெயிலிலிருந்து வெளியே வந்த அவர் கடந்த வாரம் தன்னுடைய மனைவியை பார்க்க சென்றார் .அப்போது அங்கிருந்த அவரின் மாமியார் ஷிகாம் அவரிடம் தன்னுடைய மகளுக்கு வேறு ஒருவரை பார்த்து கல்யாணம் செய்து வைத்து விட்டதாகவும் ,இப்போது அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் ,அதனால் வெளியே போகும்படி அவரை விரட்டினார் .

இதனால் கோவப்பட்ட அந்த ஷேக் நேராக கடைக்கு சென்று ஒரு அருவாளை வாங்கி வந்தார் .பின்னர் வீட்டுக்கு வந்து அவருடைய மாமியாரை கொலை செய்தார் .பிராகு இந்த கொலை பற்றி தகவலறிந்த போலீசார் அந்த ஷேக் மீது மேலும் ஒரு கொலை வழக்கை பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்

Contact Us